04,Jul 2025 (Fri)
  
CH

பேருந்துக் கட்டணம் 0.55% குறைப்பு: இன்று முதல் அமுல்!

இலங்கையில் பேருந்துக் கட்டணங்கள் இன்று (ஜூலை 4) முதல் 0.55% வீதத்தால் குறைந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும், ஆரம்பக் கட்டணங்களான 27 ரூபாய், 35 ரூபாய் மற்றும் 45 ரூபாய் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


ஏனைய பேருந்துக் கட்டணப் படிமுறைகளில் 1 ரூபா, 2 ரூபா, 3 ரூபா மற்றும் 4 ரூபா அளவில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பேருந்துக் கட்டணமான 2,170 ரூபா, 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 2,159 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வருடாந்தப் பேருந்துக் கட்டணத் திருத்தங்களின்படி முன்னர் 2.5% வீதத்தால் கட்டணத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அண்மையில் எரிபொருள் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அடுத்து, கட்டணக் குறைப்பு வீதம் மறுசீரமைக்கப்பட்டு 0.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




பேருந்துக் கட்டணம் 0.55% குறைப்பு: இன்று முதல் அமுல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு