04,Jul 2025 (Fri)
  
CH

மாரவில வர்த்தகர் படுகொலை: குப்பைத் தொட்டியில் சடலம் மீட்பு; நண்பர் கைது!

பல நாட்களாகக் காணாமல் போயிருந்த மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் சடலம், வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் படுகொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த ஜூன் 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (ஜூலை 3) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.


பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடந்த ஜூன் 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யும் பொருட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து

ள்ளனர்.




மாரவில வர்த்தகர் படுகொலை: குப்பைத் தொட்டியில் சடலம் மீட்பு; நண்பர் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு