சமாளித்து வேலை செய்ய வேண்டியது அவசியம் என்பதால் உங்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள இவற்றை டிரை பண்ணுங்க..!
எட்டு மணி நேர வேலைப் பளுவால் மாலை ஆனதும் படிப்படியாக உடல் ஆற்றல் குறைந்துகொண்டே வரும். இருப்பினும் அவற்றை சமாளித்து வேலை செய்ய வேண்டியது அவசியம் என்பதால் உங்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள டிப்ஸ்.
மதிய உணவு : இரவு வரை நம்முடைய ஆற்றலைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுவது மதிய உணவுதான். எனவே அதில் கவனம் செலுத்துவது அவசியம். முடிந்தவரை கார்போஹைட்ரேட்டை (அரிசி சோறு) அதிகம் உட்கொள்வதைத் தவிருங்கள். அதற்கு பதிலாக நன்கு ஊட்டச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள். இவற்றை சாலடுகளாக செய்து ருசியாக சாப்பிடுவதால் உணவு சளிப்படையாமல் இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு அல்லது எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களை மதிய உணவுக்குப் பின் எனர்ஜி ட்ரிங்க் -ஆக அருந்துங்கள். இது உடனடி உடல் ஆற்றலுக்கு உதவும். பழம் மட்டுமல்லாது இந்த வகைப் பழங்களின் நறுமண எண்ணெய் இருந்தாலும் அவற்றை கைகளில் தேய்த்து நுகர்வதும் புத்துணர்வாக இருக்கும். உறங்கும் மூளையை தட்டி எழுப்பும்.
உடல் அசைவுகள் : அமர்ந்த படியே வேலை என்றால் அல்லது உடல் வலியாக உணர்ந்தால் ஐந்து நிமிட ஸ்ட்ரெச்சஸ் , உடல் அசைவுகளை செய்வது நல்லது. இதனால் தசைகள் இலகுவாகி, இரத்த ஓட்டத்தின் பாய்ச்சல் தீவிரமடையும். இதனால் உடல் உடனடியான ஆற்றலைப் பெறும். உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.
தண்ணீர் : உடல் தண்ணீர் வற்றிப் போவதும் உடல் சோர்வுக்கு முக்கியக் காரணம். எனவே அவ்வபோது தண்ணீர் அருந்துவதைத் தவறாதீர்கள். அதுதான் உடலுக்கு எப்போதும் ஆற்றலைத் தக்க வைக்கும் எனர்ஜி ட்ரிங்க்.
குட்டித் தூக்கம் : ஆய்வுகளின் கூற்றுப்படி பரபரப்பான வேலைகளுக்கு நடுவே 20 முதல் 30 நிமிட உறக்கம் அவசியம். இதனால் வேலையில் கவனச் சிதறல் இன்றி ஆற்றலுடன் செயல்பட முடியும். உடலுக்கும் சிறந்த ஓய்வாக அமையும். சமீபத்திலும் அலுவலகங்களில் குட்டித் தூக்கம் போட ஓய்வு அறை அவசியம் என்ற வாதம் எழுந்தது. தனியார் நிறுவனங்களும் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே உங்கள் அலுவலகத்தில் அறை இல்லை என்றாலும் தூங்கும் வசதி, தூங்க அனுமதி கிடைத்தால் குட்டித் தூக்கம் போடுவது நல்லது.
0 Comments
No Comments Here ..