பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இந்திய மதிப்பில் 71 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தல் எனக் கூறியுள்ளார். இதற்காக பெசோஸ் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இயற்கையை பாதுகாக்கவும், பருவநிலை மாறுபாடுகளை தடுக்கவும் சாத்தியமான தீர்வுகளை கண்டறிய முயன்று வரும் விஞ்ஞானிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வரும் கோடை காலம் முதல் இந்த நிதியை பகிர்ந்தளிக்க இருப்பதாகக் தெரிவித்துள்ள ஜெப் பெசோஸ், அனைவரும் இணைந்து பூமியை பாதுகாப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..