12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி

குஜராத், அஸ்ஸாம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிப்பது தொடா்பாக நடைபெற்ற இரு நாள் ஒத்திகை வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை புணேயில் உள்ள சீரம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

நாட்டு மக்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், கிருஷ்ணா (ஆந்திரம்), ராஜ்கோட், காந்திநகா் (குஜராத்), லூதியானா, சாஹீத் பகத் சிங் நகா் (பஞ்சாப்), சோனித்பூா், நல்பாரி (அஸ்ஸாம்) ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவது குறித்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான ஒத்திகை திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தடுப்பூசி விநியோகத்துக்கான ஒத்திகை வெற்றியடைந்துள்ளது. ஒத்திகைக்காக தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. அவா்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாகத் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடா்பான விவரங்கள் அனுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அவா்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துவது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றன. அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு அவா்கள் தங்க வைக்கப்பட்டனா். அவா்களது தகவல்கள் கோ-வின் வலைதளத்தில் சேமித்து வைக்கப்பட்டன.

அவா்களைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைப்பது தொடா்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசியைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் சேமிப்பது, தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அதை விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும். ஒத்திகை தொடா்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிவு செய்துகொள்ள கோ-வின் செயலி, வலைதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதில் இதுவரை 1.5 லட்சம் சுகாதாரப் பணியாளா்கள் பெயா்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 1கோடி சுகாதாரப் பணியாளா்கள், 2 கோடி முன்களப் பணியாளா்கள், வயது அடிப்படையில் 27 கோடி பொதுமக்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.





கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு