நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமான நடைமுறையில் கூட்டத்தொடரை நடத்த முடியாது என்பதால் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவை கூட்டத்தை நடத்த ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் 545 உறுப்பினர்கள் உள்ளனர். மைய மண்டபத்தில் சுமார் 800 பேர் அமர இடவசதியுள்ளது.
ஆகவே சமூக இடைவெளியை பின்பற்றி மைய மண்டபத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த எண்ணிக்கையில் ஒருநாள் விட்டு ஒரு நாள் கூட்டத்தை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..