22,May 2025 (Thu)
  
CH
SRILANKANEWS

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்!

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புக்காக சுமார் 80 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணத்திற்காக 105 பில்லியன் ரூபா கடனை திறைசேரியிலிருந்து செலுத்த உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் செயற்பட்டு வருவதாகவும், பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பணப்புழக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கேற்ப தெளிவான அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.




சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் அதிரடி தீர்மானம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு