திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட உள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார். நாளை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவும் தமிழகம் வருகிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதலாவதாக நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments
No Comments Here ..