கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள் காலமானார். அவருக்கு வயது 78. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமான இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி.
லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தை இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர்.
கொரோனா மரணங்கள் இந்தியா முழுவதும் நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்திற்கு மேல் உள்ளது ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கி வருகிறது. சாமானியர்கள், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என பாரபட்சம் இன்றி கொரோனா அனைத்து தரப்பினரையும் கொடூரமாக கொன்று குவித்து வருகிறது.
ஜேடி ஜெர்ரி ஜேடி - ஜோசப் டி சாமி மற்றும் ஜெர்ரி - ஜெரால்டு ஆரோக்கியம் 1964ம் ஆண்டு பிறந்த இவர்கள் இருவரும் திரைக்கதை ஆசிரியர்களாக ஒரு குழுவாக பணியாற்றினர். தொடர்ந்து அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தை 1997ம் ஆண்டு இணைந்து இயக்கினர். பல ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இயக்குநர்களாக பயணித்து வருகின்றனர்.
லெஜண்ட் சரவணன் அருள் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட பெரிய பெரிய கடைகளுக்கு பல ஆண்டுகளாக விளம்பரப் படங்களை இயக்கி வந்த இருவரும் இணைந்து தற்போது லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் அறிமுக படத்தை சுமார் 200 கோடி செலவில் படமாக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாயகியாக நடித்து வருகிறார்.
சூசையம்மாள் காலமானார் இந்நிலையில், இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள், வயது 78, கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்து இருப்பது தமிழ் திரையுலகினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரபலங்கள் இரங்கல் இயக்குநர் ஜெர்ரியின் அம்மா சூசையம்மாள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், ஏகப்பட்ட திரை பிரபலங்களும் வணிகர்களும் அரசியல் தலைவர்களும் இயக்குநர் ஜெர்ரிக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். சூசையம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..