18,Oct 2024 (Fri)
  
CH
ஆரோக்கியம்

வியர்குருவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது வியர்க்குரு பிரச்சனையில் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பிரச்சனை உள்ளது. வியர்குரு அதிகமாக வருவதற்கு காரணம் என்னவென்றால் வியர்வை காரணமாக வரும் பாக்டீரியா கிருமியின் அதிகப்படியான உற்பத்தி தான் இந்த வியர்குரு வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தினமும் மூன்று நேரம் குளியல் என்ற நடைமுறையை இந்த காலத்தில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு மூன்று வேலை குளிக்கும் போதும் நமது உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து விடுபடலாம்.

அதையும் தாண்டி உங்களுக்கு வியர்குரு வந்தால் நல்ல என்டி பாக்டீரியல் பவுடரையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு மிகவும் லேசான பருத்தி உடைகளை பயன்படுத்துதல் நல்லது. அதிக படியான இந்த வெயில் காலத்தில் வறுத்து சாப்பிடும் உணவுகளை தவிர்க்கலாம். அதிக கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வியர்வை பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதிகப்படியான பழம், பழச்சாறுகளை எடுத்து கொள்வது வியர்குரு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.




வியர்குருவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு