07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவுமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று - 18 வீடுகள் சேதம் மாவட்டத்தில் கடும் காற்று - 18 வீடுகள் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசி வரும் கடும் காற்றினால் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் 05 நிரந்தர வீடுகளும், 13 தற்காலிக வீடுகளுமாக, 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இலிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 06 தற்காலிக வீடுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 05 தற்காலிக வீடுகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 01 தற்காலிக வீடும், 02 நிரந்தர வீடுகளும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 02 நிரந்தர வீடுகளும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு தற்காலிக வீடும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிரந்தர வீடுமாக மொத்தமாக 18 வீடுகள் இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை,18 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மேலும்,மாவட்டத்தின் பல இடங்களில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.








முல்லைத்தீவுமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் காற்று - 18 வீடுகள் சேதம் மாவட்டத்தில் கடும் காற்று - 18 வீடுகள் சேதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு