19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.89 ரூபாயாக பதிவாகியுள்ளது.


நாட்டில் தற்போது வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, வங்கிகளின் பண பரிமாற்ற வீதம் அதிகமாக இருப்பதாகவும், அமெரிக்க டொலர்கள் கறுப்பு சந்தையில் மிக உயர்ந்த மட்டத்தில் வர்த்தகம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 அ தற்கமைய கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 230 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நிதி சந்தை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக கடும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.





இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு