புதிய நகர திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் சிலவற்றை ஆரம்பிப்பதற்கும் கடந்த காலத்தில் கைவிடப்படட நகர திட்டம் மற்றும் வீட்டுத் திட்டங்களின் பணிகளை நிறைவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாநகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீட்டு வசதிகள் அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
புதிய வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது நகர திட்டங்களை செயல்படுத்தவும் மற்றும் வீட்டுத் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதற்கும் தேவையான நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட கொழும்பை கேந்திரமாக கொண்டு சில நகரங்களில் இடம்பெறும் மாநகர அபிவிருத்தியின் கீழ் கட்டிட நிர்மாணம், வீதி அபிவிருத்தி, ரயில் பாதை நிர்மாணம், பூங்கா நிர்மாணம் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் போன்று கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட சில நகரங்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..