பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆங்கிலத் தேர்வுகளை கடுமையாக்கவும், பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வதிவிட அந்தஸ்தைப் பெறுவதற்கான காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் சில அம்சங்களையும் திருத்த எதிர்பார்க்கப்படுவதுடன், அதன்படி பட்டதாரிகள் தங்கள் கற்றலுக்கு பிறகு தங்கியிருக்கும் காலத்தை 18 மாதங்களாக குறைப்பதற்கும் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் குடியேற்றத்தை நம்பியிருப்பதை விட, தொழிலாளர் சந்தையின் நிலையை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தவும் எதிர்பாரக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை இடம்பெயர்வைக் குறைப்பதற்கும் எல்லைக் கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் உத்தியோகப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..