திபெத்தில் இன்று அதிகாலை 2.41 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக ஜனவரி மாதம் 7ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட போது 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..