கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொட்டாவை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் சாரதியை அச்சுறுத்தி 20,000 ரூபா பணத்தை நபர் ஒருவர் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் குறித்த பேருந்தை நிறுத்தி வைத்திருந்த போது பேருந்தில் ஏறிய ஒருவர் சாரதியை புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாரதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து, கையடக்க தொலைபேசியை சோதனை செய்தபோது, சாரதியிடம் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் வெளிநாட்டு தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.
பின்னர், குறித்த சாரதியிடம் 25,000 ரூபா கப்பம் செலுத்துமாறு வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்திலிருந்து அச்சுறுத்தல் அழைப்பு வந்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு 07 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாடு ஒன்றில் இருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியினால் வழிநடத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..