02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 439 ஓட்டங்களை பெற்றது.


இலங்கை அணி சார்பில் Angelo Mathews 141 ஓட்டங்களையும், Dinesh Chandimal 107 ஓட்டங்களையும், Dimuth Karunaratne 77 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சாரபில் Naveed Zadran 4 விக்கெட்டுக்களையும், Nijat Masood மற்றும் Qais Ahmad ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.


போட்டியில் முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.


இந்நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது துடுப்பெடுத்தாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி சற்றுமுன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களை பெற்றுள்ளது.




இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு