18,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

குடியேற்ற கொள்கை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது...

கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் சில நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியேற்ற கொள்கை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய முஸ்லீம்களை அதிக அளவில் கொண்டுள்ள மூன்று நாடுகள் மற்றும் நைஜீரியா உட்பட நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கும் தற்போது இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக பயண தடை விதிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்படையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பயண தடை விதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை பரிமாற தவறியுள்ளதாக பதில் உட்துறை செயலர் சாட் வூல்ப் தெரிவித்துள்ளார்.

இது தவிர, பயங்கரவாத சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த விபரங்கள் இந்த நாடுகளினால் வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில், மக்கள் நலன் மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாடுகளுக்கான பயண கட்டுப்பாடுகள் பெப்பிரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




குடியேற்ற கொள்கை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு