07,May 2024 (Tue)
  
CH
WORLDNEWS

100 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா அருகே உள்ள நைஜர் மாநிலத்தின் சுலேஜா என்ற இடத்தில் பழமையான சிறைச்சாலை ஒன்று உள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருந்து வேலி உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை உடைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைத்துறையினர் மற்றும் மற்ற ஏஜென்சிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 கைதிகளை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுலேஜாவை ஒட்டியுள்ள மாநிலத்தில் அடர்ந்த காட்டிற்குள் தப்பி ஓடிவிட்டால் பிடிக்க கஷ்டமாகிவிடும் என அதிகாரிகள் பயப்படுகின்றனர். அந்த காடு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள கும்பல் அதிகமாக வாழ்ந்து வரக்கூடிய இடமாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நைஜீரியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக, 1960-க்கும் முன் காலனி ஆதிக்கத்தில் கட்டப்பட்டதாகும்.

கட்டமைப்புகள் அரிதாகமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் கைதிகள் தப்பிக்க மிகவும் எளிதாகிவிட்டன. அபுஜா ஜெயிலில் இருந்து இதுபோன்று ஆயிரம் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 2022-ல் சுமார் 900 கைதிகள் தப்பிச்சென்றனர்.




100 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு