18,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் கிணற்று நீரை பயன்படுத்துவதாகவும் கிணறுகள் வற்றிவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கிழக்கிந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான வானிலை கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது.

இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.




கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு