பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தேசியப் பாதுகாப்பு பற்றி பேசும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களது கட்சிகளில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான 50க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சில எதிர்க்கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..