இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி தாமதமடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதியை பதிவு செய்வதற்காக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல்களை அனுப்பிய போதிலும், இன்று வரை அதற்கான உறுதிப்படுத்தல் வழங்கப்படவில்லை.
இதன் விளைவாக, இதுவரையிலும் உப்பை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ள உப்புத்தொகை, இலங்கைக்கு வருவதற்கு சில நாட்கள் தாமதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உப்புத்தொகை இன்றிரவு இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.எனினும், சீரற்ற வானிலையால் அதன் வருகை சில தினங்கள் தாமதிக்கலாம் என்று இலங்கை உப்பு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..