ஹட்டன் - மஸ்கெலியா வீதியின் நியூவெலி பகுதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் சுமார் 2 மணித்தியாலங்களுக்குப் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..