ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலை இரத்து செய்வது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இன்று (04) பாராளுமன்றத்தில் இந்தக் கருத்தினை வௌியிட்டார்.
"புலமைப்பரிசிலை தற்போது இரத்து செய்ய திட்டமில்லை. புதிய சீர்திருத்தங்களின் தாக்கத்துடன் செய்யவே எதிர்பார்க்கிறோம். இருப்பினும், புலமைப்பரிசில் மீதான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுப்போம். 2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் அதைச் செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
0 Comments
No Comments Here ..