17,Jul 2025 (Thu)
  
CH

ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் கதை

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கூலி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணையும் இந்த பிரம்மாண்டப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதிரடி ஆக்ஷனுக்குப் பஞ்சமிருக்காது. அதே பாணியில் 'கூலி' திரைப்படமும் உருவாகியுள்ளது.


சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ், படத்தின் முதல் பாதி ஒரு எமோஷனல் டிராமாவாக இருக்கும் என்றும், இடைவேளைக் காட்சியில் ரஜினிகாந்தின் 'Transformation' நடக்கும் என்றும், அதன்பிறகு படம் முழுவதுமே அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


'கூலி' படத்தின் கதைச் சுருக்கம்:

'கூலி' திரைப்படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்து, தனது வாழ்வை மீட்டெடுக்கும் ஒரு மனிதனின் இடைவிடாத பழிவாங்கும் தேடலே இந்தப் படத்தின் மையக்கருவாக இருக்கும் என கூறப்படுகிறது.


லோகேஷ் கனகராஜ் தனது தனித்துவமான பாணியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான நாடகத்தை எவ்வாறு படமாக்கியுள்ளார் என்பதை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் போது காணலாம்.





ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்: எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் கதை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு