19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுக நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற தேசிய சட்ட மாநாட்டின்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் வரைபடத்தை மாற்றி கொழும்பு நகரின் ஒரு நீட்சியாக இந்நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கடலை நிரப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு China Communication Construction நிறுவனம் செலவிடவுள்ள தொகை 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கட்டிடத் தொகுதிகளுக்காக மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன. புதிய நிலப் பிரதேசத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு விசேட குழுவொன்றினால் ஆராயப்பட்டு வருகின்றது.

அது நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் விசேட பொருளாதார வலையமாக பிரகடனப்படுத்தப்படும். சேவைகளுக்கான முதலாவது விசேட பொருளாதார சேவை வலயம் இதுவாகும்.

நகர அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் China Communication Construction நிறுவனமும் இணைந்து முத்தரப்பு உடன்படிக்கையொன்றின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

கட்டட நிர்மாணப் பணிகள் இவ்வருடம் நடுப் பகுதியில் ஆரம்பமாகும். முதற்கட்டம் 2023ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளது.





ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு