காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவ மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments
No Comments Here ..