இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மால்டா மாவட்டத்தில் நேற்று (16) மாலை மின்னல் தாக்கியதில் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துக்ள்ளனர்.
நேற்று மதியம் முதல் மால்டா பகுதிகளில் கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த 11 பேரில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.
நகர் பகுதியைக் காட்டிலும் அம்மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சோபாநகர் கிராமப்பகுதியில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு மரத்தின் அடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மால்டா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று இந்திய மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..