புன்னகை தவழ பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், கடந்த சில நாட்களில், இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். சமூக வலைதளங்களை, இரண்டு நாட்களாக அலங்கரித்த இவாங்கா அதிபர் ட்ரம்ப்பின் மகள் என்ற அடையாளத்திற்கு மட்டும் சொந்தக்கரார் அல்ல, அவரது ஆலோசகராகவும் செயல்படுகிறார்.
தற்போது இரண்டாவது முறையாக இந்தியா வந்த இவாங்கா, கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற, சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இவாங்கா டிரம்ப்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக அதிகாரமிக்க பதவிகளில், இவர் இல்லாதபோதும் இவருக்கு அளிக்கப்பட்ட மரியாதை பலரையும் வியக்க வைத்தது.
இந்நிலையில், குஜராத்தின் மொடேரா மைதானத்துக்கு வந்திருந்த இவாங்காவுடன் பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதிபர் ட்ரம்ப்பின் இந்த பயணத்தில், இளைஞர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது, இவாங்கா என்பதற்கு சமூக வலைத்தளங்களில் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.
38 வயதான இவாங்கா ட்ரம்ப் தனது கணவருடன், காதல் சின்னமான தாஜ்மகாலை கண்டு ரசித்தார். அங்கு எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில், இவாங்கா பகிர்ந்த சில மணி நேரங்களில், அது இளைஞர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேஸ்டஸ்களையும், சமூக வலைத்தள பக்கங்களையும் ஆக்கிரமித்தது. இதில், தாஜ்மகால் அழகா? இவாங்கா அழகா? என்ற கேள்விக்கு பலரும் தாஜ்மகாலை விட இவாங்கா அழகாக இருக்கிறார் என பதிவிட்டு எண்ணத்தை வெளிப்படுத்தினர்.
0 Comments
No Comments Here ..