13,May 2024 (Mon)
  
CH
விளையாட்டு

டென்னிஸ் நட்சத்திர மரியா ஷரபோவா ஓய்வை அறிவித்ததுள்ளார்

டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரர் ரஷ்யா வீராங்கணை மரியா ஷரபோவா ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1987ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்த மரியா ஷரபோவா தற்போது தனது 32வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். இவர் 5 முறை கிராண்ட் சலாம் பட்டமும், ஒரு முறை ஒலிம்பிக் பதக்கமும் வென்றுள்ளார். 2001ல் தனது 14வது வயதில் சர்வதேச டென்னிஸ் பயணத்தை துவங்கிய ஷரபோவா, 2002லே ஆஸ்திரேலியா ஓபன் ஜூனியர் தொடரின் பைனலுக்கு முன்னேறிய இளம்வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ச்சியான் பல சாதனைகள் படைத்த ஷரபோவா டென்னிஸ் ஜாம்பவான் செரினா வில்லிம்ஸை தனது 17வயதில் வீழ்த்தி சாதனை படைத்தார்

2004 ஆம் ஆண்டு அவரது 17வயதில் விம்பிள்டன் பட்டமும், 2006ஆம் ஆண்டு அமெரிக்கன் ஓபன் பட்டமும், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டமும் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு பிரஞ்சு ஓபன் பட்டமும் வென்றுள்ளார். 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதால் அவருக்கு 2ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.பின் அதனை 15மாதங்களாக குறைக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற ஷரபோவா இறுதி போட்டியில் செரீனா வில்லிம்ஸிடம் தோல்வி அடைந்தார்.

நீண்ட நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிபட்டு வந்த ஷரபோவா இன்று திடீரென ஒய்வை அறிவித்தது ஓட்டுமொத்த டென்னிஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் ஈடுபாடு கொண்ட ஷரபோவா அதில் இனி அதிகம் கவனம் செலுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்ப்டுகிறது.




டென்னிஸ் நட்சத்திர மரியா ஷரபோவா ஓய்வை அறிவித்ததுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு