02,May 2024 (Thu)
  
CH
கனடா

கல்கரியில் அவசரகால நிலை பிரகடனம்!

வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக கல்கரி நகரம் உள்ளூர் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

நகர மேலாளர் டேவிட் டக்வொர்த் மற்றும் கல்கரியின் அவசரநிலை நிர்வாக முகமைத் தலைவர் டாம் சாம்ப்சன் ஆகியோருடன் நகரின் அவசரகால செயல்பாட்டு மையத்தில் இந்த நடவடிக்கைகளை மேயர் நஹீத் நென்ஷி அறிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன.

இதற்மைய நகரத்தால் இயக்கப்படும் பொழுதுபோக்கு மையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அரங்கங்கள், ஒய்.எம்.சி.ஏக்கள் போன்ற சில கூட்டாளர் வசதிகள் மற்றும் கல்கரி பொது நூலகக் கிளைகள் அனைத்தும் மேலும் அறிவிக்கப்படும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், இது உணவகங்கள், மதுபானசாலைகள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றிற்கு பொருந்தாது.

ஆனால், அவை தீயணைப்பு விதிமுறைகளின் கீழ் அவற்றின் திறனை பாதிக்கும் குறைவாகவோ அல்லது 250இற்க்கும் குறைவான நபர்களிடமோ வைத்திருக்க வேண்டும்.




கல்கரியில் அவசரகால நிலை பிரகடனம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு