04,May 2024 (Sat)
  
CH
கனடா

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 903 ஆகப் பதிவாகியுள்ளன.

இதனைவிட, 8 ஆயிரத்து 235 பேர் குணமடைந்துள்ள நிலையில் 557 பேர் தீவிர சிக்கிச்சைப் பிரிவிலும் 17 ஆயிரத்து 368 பேர் ஓரளவு வைரஸால் பாதிக்கப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கனடவில் இதுவரை, 4 இலட்சத்து 54 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 14 ஆயிரத்து 248 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 7 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அல்பேர்டாவில் ஆயிரத்து 870 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 517 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.





கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு