15,Jun 2026 (Mon)
  
CH
WORLDNEWS

இந்தோனேசியாவில் வெடிக்கும் எரிமலை – சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால். அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2 வது முறையாகும். முன்னதாக, கடந்த 16 ஆம் திகதி ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.





இந்தோனேசியாவில் வெடிக்கும் எரிமலை – சுனாமி எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு