உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி தற்போது மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்நாட்டில், இதுவரை 25 ஆயிரத்து 680 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 297 வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னைய நாட்களை விட தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் நேற்று ஒரேநாளில் 63 பேரின் மரணங்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 780 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறுவொரும் கணிசமாக உள்ளநிலையில் இதுவரை 7 ஆயிரத்து 756 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கனடாவில், கியூபெக் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மொத்தமாக 13 ஆயிரத்து 557 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைவிட, ஒன்ராறியோவில் இதுவரை 7 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆவது மாநிலமாகக் காணப்படுகிறது.
மேலும் அதிகபட்சமாக, அல்பேர்டா மாநிலத்தில் ஆயிரத்து 732 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 490 பேரும் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கனடாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரில் குணமடைவோரின் வீதம் 91 ஆக உள்ளதுடன் இறப்பு 9 வீதமாகக் காணப்படுகின்றது. அங்கு 4 இலட்சத்து 37 ஆயிரத்து 475 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..