01,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 கடந்துள்ளது.

அதிவேகமாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,276ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் தொடங்கி இன்று வரை உலகின் 176 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரான், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.

கடந்த சில தினங்களாக ஈரான் நாட்டில் பலி எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்தவண்ணமாக உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஒரே வாரத்தில் மூன்று மடங்காக உயர்ந்த பலி எண்ணிக்கை:

Mar 19 : 149 (1,284)

Mar 18 : 147 (1,135)

Mar 17: 135 (988)

Mar 16: 129 (853)

Mar 15 : 113 (724)

Mar 14 : 97 (611)

Mar 13 : 85 (514)

Mar 12 : 75 (429)

Mar 11 : 63 (354)

Mar 10 : 54 (291)

இதேபோல ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 129 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு சீனாவில் 3,245 பேரும், இத்தாலியில் 2,978 பேரும், ஈரானில் 1,284 பேரும், ஸ்பெயினில் 767 பேரும், அமெரிக்காவில் 155 பேரும், பிரான்சில் 264 பேரும் பலியாகி இருக்கின்றனர்.

ரஷ்யா, மெக்ஸிகோ, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று முதல் முறையாக கொரோனாவினால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவினால் அதிக பாதிப்பை சந்தித்த வந்த தென் கொரியாவில் கடந்த ஒரு வாரமாக வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் நேற்று அங்கு 152 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் 80% அதிகமான கொரோனா பாதிப்புகள் சமூக பறிமாற்றத்தால் நிகழ்ந்தவை என கூறப்படுகிறது.

நியூசிலாந்து அருகேயுள்ள பிஜி தீவுகளில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9,000 கடந்துள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு