இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,415ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 74,281ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,525 பேருக்கு பாதிப்பும், 122 பேர் மரணமும் அடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் நீடிக்கிறது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் இன்று காலை பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
ஒடிசாவில் புதிதாக 73 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 611ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் இருந்து 1,166 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஷ்ரமிக் சிறப்பு ரயில் திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவை சென்றடைந்தது.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து ஷ்ரமிக் சிறப்பு ரயில் மூலம் 1,428 தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் ரேவாவிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 75,000 பேரைக் கடந்துள்ளது. அதேசமயம் நேற்றைய தினம் இரண்டாவது அதிகபட்ச பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று 4,308 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று 3,783 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனாவில் பேருந்து மீது ட்ரக் மோதிய விபத்தில் 8 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் புறப்பட்டுச் சென்ற சிறப்பு ரயில் ஜம்முவின் தவி ரயில் நிலையத்தை போய் சேர்ந்தது.
0 Comments
No Comments Here ..