15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு 40ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் 20 இலட்சம் கோடி ரூபாயில் சிறப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 12ஆம் திகதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய நிலையில் 20 இலட்சம் கோடி திட்டம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் குறித்த திட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றார்.

கடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து அறிவித்த நிலையில் 5 ஆம் நாள் அறிவிப்பான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், மருத்துவம், 100 நாள் வேலைத்திட்டம், கல்வி, பொதுத்துறை உட்பட 7 அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இது தொடர்பாக நிதியமைச்சர் இன்றைய அறிவிப்பில் 100 நாட்கள் வேலைத் திட்டத்திற்குக் கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் 61 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் தற்போது கூட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையங்களையும் பொது சுகாதார ஆய்வு மையங்கள் அனைத்து வட்டார அளவிலும் அமைக்கப்படும் என சிதியமைச்சர் அறிவித்துள்ளார்.







100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு 40ஆயிரம் கோடி ஒதுக்கீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு