கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல்கள் அணைக்குழுவுடன் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் கம்லத், குறித்த சுகாதார வழிகாட்டுதல்களின் வரைபு தொடர்பாக இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்யவது அவசியம் என கூறினார்.
“நாம் வகுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை அவர்களால் செயற்படுத்த முடியுமா என்பதைஅறிந்துகொள்ள தேர்தல்கள் அணைக்குழுவுடன் நாளை சந்திப்பொன்றினை நடத்த தீர்மானித்துள்ளோம்” என கூறினார்
0 Comments
No Comments Here ..