15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்

கடந்த மாா்ச் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

தொடா்ந்து, ஏப்ரல் 7 ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக இரா. லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோா் நியமிக்கப்பட்டு, எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

எல்லை வரையறைப் பணிகள் நிறைவுற்றதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் தெற்குவீதியில் உள்ள வணிகவரித் துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கிவைத்தார். இதன்மூலம் மயிலாடுதுறை பகுதி பகுதி மக்களின் கால் நூற்றாண்டு கனவு நனவாகி உள்ளது.




தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு