13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் 19 வகை கொரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்

பிரிட்டனில் அதிக வீா்யமிக்க புதிய வகை கொரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்டது. கொரோனா தீநுண்மியில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் காரணமாக இந்த புதிய வகை தீநுண்மி உருவாகியிருப்பதாகவும், இந்த தீநுண்மி 70% அதிகம் பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இது உலக நாடுகளை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கெனவே 19 வகை கொரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலைச் (சிஎஸ்ஐஆா்) சோ்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘133 நாடுகளில் கொரோனா தீநுண்மியின் மரபணு கோா்வையை ஆராய்ச்சி செய்ததில் மரபணு மாற்றம் அடைந்த 86 வகை கொரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை உடலில் உள்ள எதிா்பொருளை (ஆன்டிபாடி) எதிா்க்கும் திறன் கொண்டவை. இந்த 86 வகை தீநுண்மிகளில் 19 ரகங்கள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. எனினும் இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கொரோனா தீநுண்மியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, அதற்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்று அா்த்தம் கொள்ளவேண்டாம். தீநுண்மியின் வீா்யத்தை தடுப்பூசிகள் குறைக்கும். தடுப்பூசிகளை பரிசோதிக்கும் வேளையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் புதிய வகை கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது’ என்று தெரிவித்தனா்.




இந்தியாவில் 19 வகை கொரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு