இலங்கையிலிருந்து 6 பேர் அடங்கிய குறித்த நிபுணர்குழு தமது ஆராய்வுகளை நிறைவு செய்த பின்னர் விசேட விமானத்தில் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அவர்கள் கடந்த 31 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த குறித்த நிபுணர் குழு படைப்புழு அதிகளவில் பரவுகின்ற பகுதிகளுக்கு சென்று தமது பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
படைப்புழு தொடர்பில் ஆய்வு செய்வதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக அவர்கள் நாட்டிற்கு வந்திருந்தனர்.
படைப்புழு பரவலை கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட வைரஸ் சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்துவாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோள செய்கையில் சுமார் 2 லட்சம் ஹெக்டயார் படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் ஏற்பட்ட படைப்புழு தாக்கத்தினால் அம்பாறை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் சோளப்பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்
0 Comments
No Comments Here ..