இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் திரைக்கு வந்தது. இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டு ஆயிரத்தில் ஒருவன் 2 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி படத்திற்கு முன்பே தமிழில் ஹாலிவுட் படத்திற்கு நிகரான படமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்குநர் செல்வராகன் இயக்கி இருந்தார். 2010ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு பல திரையரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் படமும் திரையிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் மீண்டும் தனது தம்பி தனுஷ் உடன் ஒரு படம் பண்ணப் போவதாக அறிவித்து இருந்தார்.
புதுப்பேட்டை 2 படத்தை தான் பண்ணப் போகிறேன் என கல்லூரி விழா ஒன்றிலும் கூறியிருந்தார். ஆனால், இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தை தனுஷை வைத்த இயக்க உள்ளார்.
இப்படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கைவசம் ஏகப்பட்ட படங்கள் உள்ள நிலையில், அந்த படங்களை முடித்து விட்டு, ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் நடிப்பார் என தெரிகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ப்ரீ புரடொக்ஷன் பணிகளை செய்யவே ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும், நீண்ட காத்திருப்பு தான் என்றாலும், அதற்கு வொர்த்தாக படம் இருக்கும் என உறுதி அளித்துள்ளார். சோழனின் பயணத்திற்கு ரசிகர்கள் இப்போதே ரெடியாகி விட்டனர்.
இது ஒருபக்கம் இருக்க செல்வராகவன் பகிர்ந்துள்ள போஸ்டர் எங்கிருந்து சுட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாவலின் முகப்பு பக்கத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து 'என்ன தல இது?' என கிண்டலடித்து வருகின்றனர். சிலர் 'பெட்டரா டிசைன் பண்ணிருக்கலாம் அட்லி லெவல் போய்ட்டாப்ல' என பதிவிட்டு வருகின்றனர்
0 Comments
No Comments Here ..