29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில் கறிக்கோழி, முட்டையின் விலை மீண்டும் குறைந்துள்ளது

கேரளா மற்றும் வடமாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளதால் ஏராளமான கோழிகள் உயிரிழந்து வருகின்றன.காய்ச்சலின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசே கோழி, வாத்துகளை அழித்து வரும் நிலையில், மனிதர்களுக்கும் பரவலாம் என கூறப்படுகிறது.எனவே கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை ஏற்றமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் அங்கிருந்து வரும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கலில் முட்டை மற்றும் கறிக்கோழி மேலும் சரிவடைந்துள்ளது. நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் குறைந்து 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கறிக்கோழி விலை 6 ரூபாய் குறைந்து ரூ. 72க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 14 ரூபாய் விலை குறைந்த நிலையில், இரண்டு நாட்களில் 20 ரூபாய் விலை குறைந்துள்ளது.




தமிழகத்தில் கறிக்கோழி, முட்டையின் விலை மீண்டும் குறைந்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு