03,Dec 2024 (Tue)
  
CH
கனடா

யாழ் பல்கலைக்கழக்கத்தில் இடிக்கப்பட்ட நினைவுதூபி தொடர்பாக கனடாவில் கண்டனபேரணி

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட அநியாயத்தைக் கண்டித்து கனடாவில் நாளை கண்டன வாகனப் பேரணி இடம்பெறவுள்ளது.

கனேடியத் தமிழர் சமூகம் மற்றும் கனேடிய தமிழ் மாணவர்கள் இணைந்து கண்டன வாகனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் மற்றும் ஸ்கார்பரோ பகுதிகளில் இருந்து 10-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு இந்தக் கண்டன வாகனப் பேரணி ஆரம்பமாகுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து தமிழின உறவுகள்,அமைப்புக்கள், ஊர்ச்சங்கங்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.





யாழ் பல்கலைக்கழக்கத்தில் இடிக்கப்பட்ட நினைவுதூபி தொடர்பாக கனடாவில் கண்டனபேரணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு