09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

மரகத லிங்கத்தின் சிறப்புக்கள்,வணங்குவதால் உண்டாகும் பலன்கள்

மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகத லிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம்.

முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்...Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.




மரகத லிங்கத்தின் சிறப்புக்கள்,வணங்குவதால் உண்டாகும் பலன்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு