22,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இந்தியா முழுவதிலும் ரத்னசூத்ர பிரித் பாராயண வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு

ரத்தன சூத்ர பிரித் உபதேச நிகழ்வை இன்று தொடக்கம் ஒரு வார காலத்திற்கு இந்தியா முழுவதிலும் நேரடி அஞ்சல் செய்ய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மற்றும் கொவிட் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு நல்லாசி வழங்குமுகமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் ரத்தனசூத்ர பிரித்பாராயண நிகழ்வை நடத்தி வருகிறது 

இந்த பிரித் பாராயணம் 183ஆவது நாளாக இன்று இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்றலில் அமைந்துள்ள போதிக்கு அருகிலிருந்து இந்த ரத்தனசூத்ர பிரித் பாராயணத்தை இன்று முதல் ஒரு வார காலத்திற்கு இலங்கையிலும், இந்தியாவிலும் நேரடி அஞ்சல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெசாக் மாதத்தில் இவ்வாறான புண்ணிய கருமத்தை இந்திய மக்களுக்கு செய்யக் கிடைத்துள்ளமை பெரும் பாக்கியமாகும். அதேபோல், ஒரு முக்கிய பொறுப்பாகும். இந்தியா தற்போது கொவிட் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சந்ரபால லியனகேவின் மத்தியஸ்தத்துடன் கூட்டுத்தாபன ஊழியர்கள் இணைந்து இந்த பிங்கம நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அரசாங்கத்தினதும், தேசிய வானொலியினதும் ஆசியையும், பிரார்த்தனையும் இந்திய மக்களுக்கு வழங்கும் வகையில் மஹா சங்கத்தினரால் இந்த பிரித்பாராயணம் செய்யப்படவுள்ளது.

இந்த பிரித் பாராயணத்தை தேசிய வானொலியின் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள் ஊடாகவும், பிராந்திய சேவைகள் ஊடாகவும் 873 சிற்றலை ஊடாகவும் இந்தியா முழுவதிலும் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிபரப்பு மீள் ஒலிபரப்பாக மறுநாள் காலை 6 மணிமுதல் 8 மணிவரை ஆசிய ஹிந்தி சேவையில், 25 எம் 11908 கிலோ ஹேட்ஸ் சிற்றலை ஊடாகவும் ஒலிபரப்பப்படும். இன்று மாலை 6.30 முதல் 7.30 வரை அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அலைவரிசைகள் ஊடாக இந்த ரத்தனசூத்ர பிரித் பாராயணம் ஒலிபரப்பப்பட்டது. நாளை தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மாலை 6 மணி தொடக்கம் 7 மணிவரை இந்த ஒலிபரப்பு இடம்பெறும்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... #Tamils4.com# News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்தியா முழுவதிலும் ரத்னசூத்ர பிரித் பாராயண வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு