நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினமும் 24 கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், கந்தபளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தெரிபா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், மத்துரட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்று வரை (2ஆவது அலை) நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 757 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2020 மார்ச் மாதம் முதல் நேற்று வரை மொத்தமாக 2 ஆயிரத்து 80 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் எமது செய்திகளை தெரிந்து கொள்ள TAMILS4NEWS உடன் இணைந்திருங்கள்
0 Comments
No Comments Here ..