இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டது.
அதற்கமைய அத்தியாவசிய தேவையை தவிர்த்து வேறு நபர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நடைமுறை நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
நாளை அதிகாலை பயண கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற போதிலும் மே மாதம் 31ஆம் திகதி வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும்.
பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் அலுவலக அல்லது தொழில் நடவடிக்கையை தவிர்த்த வேறு விடயங்களுக்காக வீடு வெளியே செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமையயே செல்ல வேண்டும்.
அதற்கமைய நாளை தினம் அடையாள அட்டை முறைக்கமைய வீட்டிற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..