29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஜுலை 19 தான் கடைசி முடிவு - பிரித்தானியா பிரதமர் போரிஸ் தகவல்

பிரித்தானியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்குவது குறித்து ஒரு இலக்கு வைத்திருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..


பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டது.


தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததால், வரும் 21ஆம் திகதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் தளர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் இப்போது தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடு அடுத்த நான்கு வாரங்கள், அதாவது வரும் ஜுலை 19ஆம் திகதி வரை நிடிக்கப்படலாம் என்று போரிஸ் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தற்போது அவர், வரும் ஜுலை 19ஆம் திகதிக்குள் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று தான் நம்புவதாக கூறியுள்ளார்.


இதற்காக புதிய இலக்கு நிர்ணையிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கான தரவுகளை அடிப்படையில் கொண்டு, இந்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதனால் ஜுலை 19ஆம் திகதிக்கு பின் நிச்சயமாக ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், பிரித்தானியா கொரோனா இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டினர், அதாவது சிவப்பு பட்டியலில் இல்லாதவர்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  




ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஜுலை 19 தான் கடைசி முடிவு - பிரித்தானியா பிரதமர் போரிஸ் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு