எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளை கேட்கட்டும். ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடக்கிறது.
டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
* கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
* தடுப்பூசி போட்டுக்கொண்டு பாகுபலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும்.
* அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
* எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளை கேட்கட்டும். ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
* மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..